இளைஞனே -1
இளைஞனே,
நீ தனி ஒருவன்...
இலகுவான காலம்
இமயமேறியது...
எளிதாயிருந்ததெல்லாம்
எடுத்துக்கொண்டு விட்டார்கள்..
எதிர்நோக்குவதெல்லாம் இன்று
கடிது கொடிது.
என் செய்ய நீ?
சிந்தி, தொலைநோக்கு,
பயணதூரமெல்லாம் புதைகுழிகள்
பகைவனின் பதுங்கு குழிகள்...
சித்தம் தெளி, உன்னால் முடிவது
எதுஎதென வரிசைப்படுத்து,
தனி ஒருவன் செய்வதெல்லாம்
செய்துவிட முடியாது தான்..
உன்னை நீ செதுக்கு,
ஊரை இப்போதைக்கு ஒதுக்கு,
ஊருக்கு செய்வதெல்லாம்
ஒரு நாள் செய்யலாம்.
ஏனெனில் தனி ஒருவனால்
அது சாத்தியமா,
நம்பிக்கை ஒளியில்
போதிய வெளிச்சம் இல்லை,
மெழுகு நீ இல்லை,
மெய்ப்பொருள் தேடு,
மேய்ப்பவன் நீயாக
மெலி, தெளி, மேம்படு...
(தொடரும்)