நீயே நீயே என் தேவதை நீயே

ஆசைப்பட்டது நிறைய
கிடைத்திருக்கு
ஆனால்,
கிடைத்தது மீது
நிறைய ஆசைப்பட்டதென்றால்?
அது
உன் மீதாகத்தானடி இருக்கும்..
***********
உன்னை
உரசிச்சென்ற பின்பு
பட்டாம்பூச்சிகள் உணர்ந்திருக்கலாம்
தேனைவிட
பூக்கள்தான் இனிமையானதென்று.
**************