விடுபடாத நினைவுகள்

விடுபடாத நினைவுகள்
உன்னுடையதாக மட்டுமே இருக்கிறது...

விடைபெறாத கனவுகள்
என்னுடையதாக மட்டுமே இருக்கிறது...

உன் நினைவுகளில்
நானிருக்க ஆசைப்பட்டது என்ன கனவா..

என் கனவுகளில்
நீமட்டுமே இருப்பது ஆகுமா நினைவா...

விடையில்லாத விடுகதையானது
நமது உறவா...

தடையில்லாமல் நிரந்தரமானது
மட்டும்தான் பிரிவா..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Oct-15, 5:40 pm)
பார்வை : 1177

மேலே