மனதுள் மழை

என் மனதுக்குள் ஏனோ மகரந்த மழை
நம் காதல் பயிர் மெல்ல விட்டிடும் முளை
கொடுக்க வேண்டுமா நானும் ஓர் விலை
கண்ணால் காண மழையில் நனைந்த சிலை
உன் எழில் கண்டு பிறந்தது தானோ கலை
அதில் மயங்கி பிதற்றுவது தான் என் நிலை
யாதானாலும் நீ பொறுக்க வேண்டும் பிழை
உனதழகை காண தடை போடும் நூல் இழை
காண்பதா தொடுவதா குழப்புகிறது உன் இடை
என் பித்தம் தெளிய அது தானோ நல்ல விடை
உன் மேனி முழுதும் மழை துளிகளின் படை
கட்டி அணைத்து போர் செய்ய ஏதும் உண்டோ தடை
காலங்கள் பல மாறினாலும் மாறாத ஓர் நிலை
காதல் முற்றி காமம் முதல் அரும்பு விடும் நிலை
தப்பு என் மேலா உன் மேலா காதல் மேலா தெரியவில்லை
தப்பு செய்வதும் காதலின் ஓர் நிலைதானோ புரியவில்லை