தீராக்காதலி

காதலை ஊற்றி
அன்றைய நாளை
தினமும் நிரப்புகிறாள்
காலை எழுந்ததும்
இதழ் சுவைத்து
எச்சில் தாகம் தீர்க்கிறாள்
பசிக்கும் நேரத்தில்
ஒரு முத்தம் போதுமென்கிறாள்
எதிர்வீட்டு நாய்குட்டியை
இங்கிருந்தே கொஞ்சல் செய்கிறாள்
நிலவின் நிழலில்
எனக்கு மாதமொரு முறை
மது குவளை நிரப்பி தருகிறாள்
மழை கால மாலையில்
சன்னலோரத்தில்
என்னை அணைத்துக்கொள்கிறாள்
குளிர்கால பின்னிரவில்
என்னையே போர்த்திகொள்கிறாள்
கட்டிலறையில் மட்டும்
பெண்ணாதிக்கம் செய்கிறாள்
ஆடைகள் களைகையில்
கொரிலாப் போர்களை
கண்களால் செய்கிறாள்
இசையமுதாய்
இரவெல்லாம்
கவிதை பாடுகிறாள்
காமம் தீர்ந்த வேளைகளில்
இலக்கியம் பேசுகிறாள்
தினமும் ஒருமுறையெனும்
என்னை கிளர்ச்சியடைய செய்கிறாள்
விடுமுறை நாட்களில் மட்டும்
அதற்கு எண்ணிக்கையில்லாமல் செய்கிறாள்
இப்படித்தான் என்னை
இன்பத்தில் மூழ்கடிக்கிறாள்
என் தீராக்காதலி...