கவிதையே தெரியுமா

பேதையே தெரியுமா என் போதை நீதானடி
விடலையே தெரியுமா காதல் மடலை நான்தானடி

ஊடல் நிலைக்கும் போதிலும் ...காதலே
கூடல் முடிந்த போதிலும் ...காதலே

உலகில் குதித்த நிலவே
என் கையில் உதிர்ந்த மலரே
இதயம் நுழைந்த முகமே
என்னிதழை நனைத்த இதமே

மூங்கில் காணாத
பென்குழல் ராகம்
என்னை தாலாட்டுதே

கவிஞர் பாடாத
சிந்தையொன்று
என்னை மெய்சீண்டுதே

நாணம் பூ பூக்குதே ...

விழியில் விழுந்த ஒளியே
என் வழியில் எழுந்த ஒலியே
தூக்கம் கூட்டும் குளுரே
தாகம் கொடுக்கும் நீரே

தலையணையாக மாறி
உன் மஞ்சம் சேர்ந்து
உன்னை மடி ஏந்தவா

மழலையாக மாறி
உன்னருகே வந்து
விடலை உயிர் தீண்டவா

கண்ணில் குடிகொல்லவா ...

எழுதியவர் : அர்ஷத் (13-Oct-15, 12:12 pm)
பார்வை : 141

மேலே