என் கவிதை

என் கவிதை

என் கவிதை எனக்கருமை
எண்ணிலடங்கா புதுமையுடன்
புதுகவிதை நான் யாத்து
புதுமைகளுடன் புதுக்கவிதை...!
மரபுக்கவிதை நான் எழுதவில்லை
மரபுகளை நான் மீறவில்லை...!
தனிமையில் நான் யோசிக்க
நேரம் தான் போதவில்லை!
விலை கொடுத்து புதுப்பிக்க
காசுதான் போதவில்லை..!
வைரமுத்து வரிகளைப்போல்
வர்ணஜாலம் இதில் இல்லை..!
கண்ணதாசன் கவிதையைப்போல்
காமரசம் பொழியவில்லை..!

என் கவிதை எனக்கருமை
எண்ணிலடங்கா புதுமையுடன்
கற்பனை புயல் இடையே
கவிதை வரிகள் உதிக்கவில்லை...!
என்பேனா எழுதுவதுதான்
என் கவிதை எனக்கருமை...!

எழுதியவர் : ரவி Shrinivasan (13-Oct-15, 12:16 pm)
Tanglish : en kavithai
பார்வை : 238

மேலே