ஒரு குடிமகனாரின் குமுறல் - நகைச்சுவைக் கவிதை-5
தகிரியமிருக்கா சொல்லு...
எனக்கிருக்கிற தகிரியம்..
தகிரியமிருக்கா சொல்லு...
என் பெண்டாட்டிக்கு இருக்கிற தகிரியம்..
விடு.............
வட்ட நிலாவுக்கு இருக்கிற தகிரியம்..
குட்டி நட்சத்திரத்துக்கான தகிரியம்..
வெட்டிப்பயலே, ஒனக்கு உண்டா....?
நான் பெத்த சிறு பையன்..
நடந்து வருவான் நடுராத்திரி..!
நீ வருவியா?
நடு ராத்திரி கூட வேணாம்யா?
நாலு பக்கம் மையிருட்டு..!
ராத்திரி ஏழு மணிக்கு?
வருவியா, வருவியா..... வருவியா..?
வாய் திற... சூரியனே..! ! ! !