அப்பா

கருவிலே நான் வளர
கருவியாய் அப்பா
உறவிலே நான் மிளிர
உயிரிலே என் அப்பா!
உலகத்தில் எனக்கொரு அடையாளம்
உருவாக்கி தந்தவர் என் அப்பா
கவுலகில் நான் மிதக்க
நனவாக்கி தந்தவர் என் அப்பா...!
தோளோடு தான் சுமந்து
வேரோடு நான் வளர
வியர்வை சிந்தியவர் என் அப்பா!
பொன் பொருள் நான்பெறவே
மண்ணுக்குள் போகும்வரை
கண்போன்று காத்து
நின்றவர் என் அப்பா...!