கடைசி கவிதை
ஏதேதோ கவிதை என்று அவனும் எழுத
கவிதை வாசம் தெரியாத சில நண்பர்கள்
அவனை கவிஞர் என்று கூற
அஞ்சல்துறைக்கும் அவனுக்கும் வியாபார ஒப்பந்தம் நடந்தது
தினம் இரண்டு அஞ்சல்அட்டை வாங்கி
கவி எழுதி தபால்காரனுக்கு வேலைக் கொடுத்தான்
கவிதைவராத பத்திரிக்கையை கடன்வாங்கி காலையில் பார்ப்பான்
கண்கலங்கி கண்கலங்கி ஒருநாள்
கடைசி கவி எழுதினான்
300 பக்கம் கவிதை எழுதினேன் நானும்
ஆனால்
32 பக்கத்தில் ஒருபக்கத்தில் வரவில்லை என்ன செய்தேன் பாவம்
ஏதேதோ கவிதை என்று
எவன் எவனோ கவிஞர் என்று கொடுப்பார்கள் சன்மானம்
என் கவிதை வரவில்லை என்று இன்று இரவும் தூங்கவிடாது என் தன்மானம்
ஆசிரியரே
சரி இல்லாத தேர்வுத்தாளை குறுக்கே கோடிட்டு உலகம் உருண்டை என்பதை புரிய வைப்பது போல்
சரி இல்லாத கவிதை என்று குறுக்கே கோடிட்டு
இது எல்லாம் என்ன கவிதை ஒருமுறை பதித்துவிடு
இதுதான் என் கவிதை என்று மற்றவருக்கும் என்னை ஒருமுறை காட்டவிடு