எல்லாம் ஊழல்
எங்கும் ஊழல்....
எதிலும் ஊழல்....
காசு அடித்துக்கொட்டியதில் கட்சி ஒன்று முளைத்ததம்மா....
முளைத்த கட்சி வளர்ந்திடவே மக்கள் நீரை கேட்குதம்மா....
கிடைத்த பொருள் உயர்ந்ததென அறியாமை பேசுதம்மா....
கிடைத்தவரை லாபம் என மக்கள் கைகள் முளைக்கும் கட்சியை உயர்த்துதம்மா....
ஆட்சி என்ற ஆணவம் வந்து கட்சியில அமருதம்மா....
ஆட்சி கிடைத்த ஆணவத்தில் கட்சியும் தான் நகருதம்மா....
ஏழைக்கான அரசு பஸ்சில் கட்டணம் தான் உயருதம்மா....
சாலையோர போக்குவரத்து காவல் சட்டை மகிழுதம்மா....
குடிப்பதற்கும் கடை கடையாக நீக்கி வச்சு குடிச்சவன் கிட்ட இருக்கும் மிச்சத்தயும் அள்ளுதம்மா....
கஷ்டத்திலும் கஷ்டம்னு புருஷன் தான் சரியிலனு தான் உழைத்த காசுக்களையும் கொண்டு வந்து மனைவி கொடுக்க
காக்கி சட்டை சிரிக்குத்தம்மா.... ஏழை வயிறு காயுதம்மா....
கால் வயிறு கஞ்சிக்காக உழைத்த காசை தூக்கிக்கிட்டு கடை வீதி போனா அடுக்கடுக்க விலை இருக்குதம்மா....
தான் விதைத்த பொருளைக்கூட வாங்கத்தான் முடியலைனு தற்கொலை தான் செய்யுதம்மா....
பெத்தபிள்ளை தவிக்குதம்மா....
தெருவுல தான் நிக்குதம்மா....
பட்டினிதான் கிடக்குதம்மா....
பசி தாங்காம பிச்சை தான் எடுக்குத்தம்மா....
இத்தனையும் நடப்பதிங்க அறியாமல் ஆளுதம்மா....
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!