காதல் கனவுகள்

காற்றின் தழுவலில்
நாற்றுகள் சொக்கித் தலைசாயும்..!
அதைப்போல்தான்
உன் எண்ணங்களின் தழுவலில்
கண்கள் சொக்கிப்போய்
கனவுலகில் தலைசாயும்.!...!
இதயத்தை மூடிவைத்தும் பார்த்தேன்
முடியவில்லை...
நீ என்னுள் வரும்போதெல்லாம்
கனவுகளின் கரையோரம்
எண்ணங்களின் ஊர்வலங்கள்...!
நனவுகளின் தரையோரம்
கண்ணீர் தாரைகளின் சங்கமங்கள்,,!
நேரில் விலகிப்போனாலும்
என்னை வெறுத்துப்போனாலும்
எப்போதுமே மகிழ்ச்சிதான்...!
காரணம்..
கனவுகளில் என்றுமே
உருவமில்லாத
எண்ணங்களாய்
என் இதயம் முழுதும்
நிரம்பி நீயிருப்பது
என்னுடன்தானே.!