ரௌத்திரம்

இது பாரதியின் ரௌத்திரம்
கண்கள் சிவ சிவக்க
இதயம் படபடக்க
நெற்றி புடைக்க
எழுந்த ரௌத்திரம்
என் சக மனிதன் துன்பப்படும் வேளையில்
இதயம் முழுதும் வலிக்க
நான் கூனி குறுகி
நின்ற பொழுது எழுந்த ரௌத்திரம்
உணர்வுகள் மரத்துப் போன ஜடமாய் வாழ்ந்திருந்தால்
வெறும் காட்சி பிழைகளே தெரிந்திருக்கும்
என் உணர்வுகளுக்கு விதையிட்ட என் படிப்பு
ஒடுக்கப்பட்ட ஒரு மனிதனின் வலிகளை சொல்லித் தந்த என் படிப்பு
வெறும் எழுத்தாய் போனது
வெறும் தங்கப்பதகத்திற்கு வித்தாய் மட்டும் படிப்பானது
அன்று மாலையாய் என் கழுத்தில் விழுந்த தங்க பதக்கம்
இன்று நெருஞ்சி முள்ளாய் தைக்கின்றது
அன்று என் உணர்வுகளை தூண்டிய படிப்பே
இன்று கண்களை மூடிக்கொள்ள சொல்கிறது
சக மனிதனின் வலி புரிந்தும்
செய்வதறியாது தவிக்கின்றேன்
இறைவா! ஒரு வேண்டுகோள்
இந்த ரௌத்திரம் அழியாது இருக்கட்டும்
ரௌத்திரமே என்னை பற்றுக
ஒரு தீ போல் என் மேல் பரவுக
என் மேல் காதல் கொண்டு
என்னுடன் கூடுக
ஒரு காதலால் இங்கு ரௌத்திரம் பிறக்கட்டும்
எந்த சூழலிலும் தன் கர்பத்தை காக்கும் தாய் போல்
இந்த ரௌத்திரம் என்னுள் வளரட்டும்
மாறும்! இந்த ரௌத்திரத்தால் மாற்றங்கள் நிகழும்
அதுவரை என் ரௌத்திரமே
நீ அழியாதிரு!

எழுதியவர் : (14-Oct-15, 11:00 pm)
சேர்த்தது : ஆத்மதர்சனா
Tanglish : rowthiram
பார்வை : 118

மேலே