கோவிந்தன் பெருமை
விண்ணையும் மண்ணையும் இரு காலால் அளந்தான்
வீரத்திற்கு ராமனாய் அவதரித்தான்
தர்மத்தைக் காக்க கண்ணனாய் உதித்தான்
காண்டீபதாரி அர்ச்சுனனுக்கு விஸ்வரூபத்தை காட்டினான்
உயர் ஞானம் பெற கீதையை உபதேசித்தான்
ராமனோ கண்ணனோ உள்ளம் கவர் கள்வனோ
யாதுமே நீயல்லோ பரப்பிரம்மமே பாண்டுரங்கா!!!