கனவுச் சிதறல்கள் நிகழ்வுகளின் துளிர்கள் - உதயா

பெரும் சீற்றத்தோடு
அமைதிகொள்ளா பிரளயத்தோடு
பலத்த சூறாவளி
ருத்ரதாண்டவத்தோடு
எழுகிறது ..!

மனித வாழ்வு
மனிதத்துடன்
மனிதபிமானத்துடன்
பாரில் மிக வேகமாக
மலர்கிறது ...!

கூவ ஆறுகள் அனைத்தும்
சரித்திர பக்கங்களில்
தடயமின்றி கிடக்கிறது ..!

சமத்துவம் சங்கடமின்றி
ஜகத்தினில் சந்தனமாய்
மணந்து பரவுகிறது ..!

அனாதை இல்லத்தின்
நுழைவு வாயில் கதவுகளில்
காளான் பூத்துக்கிடக்கிறது ...!

முதியோர் இல்லம்
என்ற பெயரில் மட்டும்
சிலந்தி வீடுகட்டி வாழ்கிறது ...!

மெரினா கடற்கரையில்
வேர்கடலை செடிகள்
விளைந்துக் கிடக்கிறது ...!

படித்த இளைஞ்சனிடம்
விவசாயப் பாடம் கற்க
மேல்நாட்டு விஞ்ஞானி கூட்டம்
நீண்ட வரிசையில் நிற்கிறது ..!

பசி பட்டினி வறுமை
என்ற பேச்சுகளுக்கு மட்டுமே
பஞ்சமிருக்கிறது ...!

அந்த பட்டிக்காட்டு கருவாச்சி
கல்பனா சாவ்லாவின் சாதனையை
முறியடித்த செய்தியே
அகிலமெல்லாம் மணந்துக்கிடக்கிறது ...!

அன்று எரிய தொடங்கிய
சிறு தீக்குச்சியென்பதால்
மரணம் என்ன தொட்டுயிருக்கலாம் ..!

இன்று எழுந்துநின்ற
எரிமலை பட்டாளங்களால்
மரணத்திற்கும் மரண பயம்
தொற்றியிருக்கலாம் ...!

நாளைய சூரியன்களே
இன்றே விடிந்துவிடு
ஏனெனில் நாளை என்பது
உனக்கல்ல
நாளையின் விடியலும்
உனக்காக அல்ல ..!

எழுதியவர் : உதயா (19-Oct-15, 2:16 pm)
பார்வை : 228

மேலே