யாதும் ஊரே யாவரும் கேளிர்

ஈழத் தமிழ்க் குழந்தை
மகிழ்ச்சியான மறுவாழ்வுக்காக
ஏக்கத்தோடு காத்துக்கொண்டிருக்கும்
நேரத்தில்,
ஈரானியக் குழந்தை
பாதிக் கருகிய
தன் முகத்திற்கு
கண்ணீரால் மருந்து
தடவிக்கொண்டிருக்கும்
நேரத்தில்,
கடத்தப்பட்ட தன் குழந்தை
உயிரோடு இருக்குமோ ?
எங்கேனும் அடிமையாய்
செத்து செத்து வாழுமோ ?
உகண்டா பெற்றோர்
தன் பிள்ளையின் நினைவில்
தவணை முறையில்
சாவை அனுபவித்துக்கொண்டிருக்கும்
நேரத்தில்,
சோமாலியக் குழந்தை
தாய்ப்பாலுக்காக
கதறி அழுதுக்கொண்டிருக்கும்
நேரத்தில்,
சிரியக் குழந்தையின்
உயிரற்ற உடலை
கடலலை கரைசேர்க்கும்
நேரத்தில்,
கம்பீரமாய்
ஒளிர்ந்துக்கொண்டிருக்கிறது
ஐ . நா . சபையில்
யாருக்காகவோ எழுதப்பட்டிருந்த
'யாதும் ஊரே யாவரும் கேளீர் '