நினைத்தாலே இனிக்கும்

காதல்.......
ஆறு வயதில்
கேட்டிராத வார்த்தையாய் .....
பத்து வயதில்
புதிரான வார்த்தையாய்.....
பதினெட்டு வயதில்
மனதில் முளைக்கும் வார்த்தையாய்.....
இருபது வயதில்
தெளிவான வார்த்தையாய்.....
இருபத்தி மூன்று வயதில்
தேவையான வார்த்தையாய்.....
இருபத்தி ஏழு வயதில்
குழம்பிய வார்த்தையாய்.....
முப்பத்தி ஐந்து வயதில்
தேவையற்ற வார்த்தையாய்.....
நாற்பத்தி ஆறு வயதில்
வெறுப்பேற்றும் வார்த்தையாய்....
ஐம்பது வயதில்
பாசமான வார்த்தையாய்.....
ஐம்பத்தி ஐந்து வயதில்
நேசம் பூக்கும் வாருத்தையாய்.....
என்றும்......
விளக்கம் தர முடியாத
வார்த்தையாய்.......
நம் வாழ்வில் கலந்து வரும்
ஒன்று
காதல்........
நினைத்தாலே இனிக்கும்......

எழுதியவர் : நந்தினி (19-Oct-15, 4:20 pm)
சேர்த்தது : நந்தினி மோகன்
Tanglish : Ninaithaale inikkum
பார்வை : 108

மேலே