தெய்வம் •••
குடிக்காமலே
வாந்தி வரவைக்கும் நாற்றம்...
சாக்கடையாய்
வரும் நரகல் வார்த்தைகள் ...
சிலசமயம்
நரகாசுரனை நினைவுபடுத்தும்
அப்பாவின் செயல்கள்...
பலமுறை
அந்த நரகாசுரனிடம் இருந்து
அம்மாவின் உயிரை காப்பாற்றியது
அந்த அஞ்சறைப்பெட்டியில்
உள்ள பிட்சையாக
நீங்கள் எனக்கு
குடுத்த சில்லறை காசுதான்...
-மகி