மழைப் பெண்ணே
கனவாகவே நினைத்த நாட்களை
நனவாக்கி போறவளே !!!!
புதிதாகவே பூத்த பூக்களின்
வாசம் தந்து போறவளே !!!
எனை கட்டிப்போடும்
கண்ணே கண்ணே
மைக்கண்ணே
மெய்மயக்க இலக்கணம் பேசு
எனை சொக்கிப்போடும்
பெண்ணே பெண்ணே
மழைப்பெண்ணே
பருவ மழைப்பெண்ணே
சாரல் வீசு
பருக்கள் கொண்ட நிலா
சறுக்கிவிடும் அழகுலா
சுற்றிப்போட்ட பெனின்சுலா
வேறென்ன நான் சொல்ல ?
எனைச்சேர்ந்திட தயக்கம் என்னடி
வரும் காலம் விழாக்கோலம்
எனை மயக்கிட யோசனை வேணமே
உன் முழங்கையின் மச்சம் போதும் ....
நான் மயங்கிப்போக ...
கண்ணே கண்ணே
மைக்கண்ணே
மெய்மயக்க இலக்கணம் பேசு ...
எனை சொக்கிப்போடும்
பெண்ணே பெண்ணே
மழைப்பெண்ணே
பருவ மழைப்பெண்ணே
சாரல் வீசு !!!!!