கல்லால் செய்தானோ

எதுகை மோனைகள் உன்னை
எழுதிவிட துடிக்கின்றன!
எழுதிவைத்த கவிதைகள் என்னை
ஏளனம் செய்து சிரிக்கின்றன!

எப்போது சொல்வாய் உன் காதலை!
எப்போது ஏற்பாய் என் காதலை!
வாழ்த்துரைக்க நம் உறவுகளும்!
வந்து வாழ நம் பிள்ளைகளும்!

காத்திருக்க கன்னி இவள்
காதல்தனை மறைக்க
கடவுள் இவள் இதயம் தனை
கல்லால் செய்தானோ!

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி (22-Oct-15, 5:37 pm)
பார்வை : 146

மேலே