பார்வை ஒன்றே போதுமா-ஆனந்தி

கண்களால்
அணைத்து என்
ஆவிதனை அல்லுற
விட்டாயோ...
புதிர்கதை போலவே
விரிகிறதே உன்
பார்வையும்
விடை தருமா - என்
இதழுக்குள்...
ஆர்ப்பரித்தே
கொன்றிடுகிறது என்னை
என் மனம் - உன்
ஓர பார்வைக்காய்
காத்திருக்கையில்...
கண்கள் என்னவோ
பழையது தான் - உன்
பார்வைகளின் ஸ்பரிசம்
மட்டும் தினம் தினம்
புதியதாய்...
விழிக்குள் சிறை
வைத்தாயே விடுவிப்பது
எப்போது...
குற்றம் செய்யாமலே
விழிசிறையில்
கிடக்கவோ...
கொடுப்பது தான்
கொடுக்கிறாய்
மரண தண்டனை
வேண்டாம் - ஆயுள்
தண்டனை கொடு...
கண்களுக்குள் சிக்குண்டே
கிடக்கிறேன் - என்
காலத்தையும் முடிக்கிறேன் ...
கண்களால் நீ நடத்தும்
நாடகம் தான் என்னவோ
தந்திரமாய் உன்
பார்வையிலிருந்து தப்பிக்க
வழியுண்டா...
இரகசியமாய் சொல்லிடு
கனவிலாவது...