மணி மணியாய் வைர மழை...

சிங்காரமாய் வானவில் சீக்கிரம்... கண் இமைக்கும் நேரம்...சிடுக்கென்று மறைந்ததும்...

சுற்றும் சூரியன் சுடாமல் தூங்கும்.. வெட்டும் மின்னல் அதை விடாமல் எழுப்பும்...

ஓடும் மேகம் விண்ணை மூடும்...
மண்ணைக்கான விண்ணும் ஏங்கும்...

மணி மணியாய் மழை வைரம்... மண்ணில் வந்து சிதறியதும்...

மல்லிகைப்பூ மணக்கும்...கோடி மலர் சிரிக்கும்...

என் தோப்பு மாமரம்... மழையிலே குளிக்கும்....

சின்ன வயது மனதைத்தட்டும்...கப்பல் கட்ட காகிதம் தேடும்....

சின்னச்சின்ன குழிகள் விதியில் கணக்கும்.... தன் கறுப்பு கரைய காகம் குளிக்கும்...

மழை நீர் நிரம்பும் குடிசை வீடும்... ஒரு கணம் எந்தன் மனதை கரைக்கும்...

என் வீட்டு ஜன்னலில் சிட்டுக்குருவியும்...
சொல்லும் பாட்டில் கவிதை கொட்டும்...

இறைவன் கொடுக்கும் மழைவரம்...அது இல்லை என்ற கணம்... பூமி செளிக்குமா மறு கணம்....

எழுதியவர் : தோழி... (4-Jun-11, 3:50 pm)
சேர்த்தது : faheema
பார்வை : 459

மேலே