ஒரு கணினியின் மடல்
எனை வேண்டுமானால் Delete செய்துகொள்.
உன் மனதில் இருந்து எனை மீட்டு விடலாம்..
ஆனால் எனை ஒருபொழுதும் shift Delete செய்துவிடாதே!
நான் நீ தேடும் பொழுது இல்லாமல் போயிருப்பேன்...
எனை நீ மீண்டும்
Restart செய்வாய்!
என்ற நம்பிக்கையில்
Shut Down ஆகிக்கொண்டிருக்கிறேன்...
உன் நினைவுகளை
Cut செய்து Paste செய்துகொள்கிறேன்
மனதில்...
உன் தகவல்கள்
யாவும் என் மனதில் மட்டுமே இருக்க வேண்டும்...
உன் நெகிழ்வை
Copy செய்து Paste செய்கிறேன்
அனைவரும் அறியட்டும்
உன் திறமையை....