கடவுள் எங்கே

கல்லால் அடித்தான்
சிற்பி
கவின் சிலையானான்
கடவுள்
சொல்லால் அடித்தான்
கவிஞன்
பாடல் பொருளானான்
கடவுள்
மலரால் அடித்தான்
பக்தன்
மௌனச் சிலையாய் நின்றான்
கடவுள்
மறு நாள் விடியலில்
மலராய் சிரித்து பாதையாய் விரிந்து
முயற்சியாய் தொடர்ந்தான்
கடவுள்

~~~கல்பனா பாரதி~~~
ஏன் இந்தப் படம் ? தெரிந்தவர் சொல்லலாம்

எழுதியவர் : கல்பனா பாரதி (24-Oct-15, 8:54 am)
Tanglish : kadavul engae
பார்வை : 137

மேலே