கொல்லாதே அன்பே

விலகி விலகி சென்றாலும்
விரட்டி விரட்டி அடிக்கும்
உன் நினைவுகள்.
தூங்கும் போதும்
என்னை தட்டி எழுப்பி
செல்லுதே..
உன்னை பிரிந்து நான்
தூரத்தில் இருந்தாலும்.
பிரியமான உன்
மூச்சுக்காற்று என்னை
சுற்றி சுற்றி வந்து
சத்தம் இன்றி முத்தம் தந்து
என்னை கொல்லுதே.