பிரேமம்

சும்மாவே காதலிப்பேன்.... இந்த மாதிரி படத்தை பார்த்தா சொல்லவே... வேணாம்...பிரேமுக்கு பிரேம் காதல்.... அப்பப்பா....இந்தக் காதலை விட்டு விடவே முடியாத நுணுக்கத்தில் இந்த விதி.... விஞ்ஞானம் மற்றும் மெய்ஞானம் இரண்டும் சேர்ந்து.. போடும் தாறுமாறுக் கணக்கில்... சுற்று வட்டத்துள் நீள் வட்டம்...

யோவ்.... அல்போன்ஸ்.... என்கையா இந்த மாதிரி பொண்ணுங்கள புடிச்ச... செத்துட்டேன்....

மேரி... மலர்.. செலின்...

கண்ணு பேசுது.. சிரிப்பு கூசுது... நளினம் வீசுது....

காதல்.... காதல்...... இந்தக் காதல்.... என்னனு சொல்லவே வேண்டாம்...சொல்லாமலும்... புரிய செய்து விடுகிறது.... அதே காதல்...... மூன்று கால கட்டத்திலும்... மூன்று விதமான தனித் தன்மை...மேரியின் கூந்தலாகட்டும்... அவளின் காதலை.. அடைய நடக்கும் கூத்துக்கள் ஆகட்டும்.. நிவின்.. பின்றான்...அந்த முதல் பாடல்... ஊற்றுகளை திறந்து விட்டு நதியாக்கும் சூட்சுமம் கொண்ட வருடலின் வாடைக் காற்று... மீண்டும் ஒரு முறை திரை விலக்கி பிரேமுக்குள் சென்ற அசரீரி ஆனேன்...காதல் எல்லாம் செய்யும்... அது தன்னை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கும் வல்லமை படைத்தவை.. ஒரு முறை வருவதற்கு அது ஒன்றும் உயிர் இல்லை.. ஒவ்வொரு முறையும் வரும் உணர்வு...

பிரிதலின் வலியோடு அந்த நேர கணத்தின் காந்த துகளின் மீட்சிக்குள் சுழன்று நின்ற பொழுதில்... "மல்ல்லர்.." என்று கன்னம் சிரிக்கும்.. அழகியாக சாய் பல்லவி.... தேவதை இப்படி தான் இருப்பாளோ....?

டீச்சர்ராக கண்கள் சிரிக்கும் முக மொழியாகட்டும்... ஆட்டம் சொல்லித்தரும்.. கெத்தாகட்டும்... யார் தான் காதலிக்க மாட்டாங்க...கடவுளைக் காண விட்டு விடாதீர்கள்...கவிதை எழுதிக் கொண்டு திரிவான்.. என்று கவிதை எழுதி லாஜிக் மீறி விடத் தோன்றுகிறது..... செயல்பாட்டில்.. எண்ணத்தில்.. ஆம்.. காதல் எந்த லாஜிக்குள்ளும் அடங்காத அத்துமீறும் இலக்கணம்.. கொஞ்சம் தலைக் கனம் கூட.. அடி பட்டு மறந்து போய் "உங்க பேர் என்ன" என்று மலர் கேட்கும் போது... எதையும் மறக்காத நோய் கொண்டவனாக நிவின் வெளியேறி அழும் காட்சி... எந்தக் காதலையும் பொய் என்று எப்போதுமே யாருமே கூற முடியாது என்பதை பதிவு செய்கிறது....

அந்து அந்த நேர வலி.. அது நிஜம்.. அது காலச் சூழலில் மாறலாம்... ஆனால் கடந்து விட்டதற்காகவே அந்த கணத்தில் கனம் இல்லை என்று பொருள் இல்லை.. பொருளோடு இறுதியின் வரும் செலின்.. சின்ன வயது குட்டி பெண்.. அதுவும்... மேரியின் தங்கை என்ற போது... புன்னகைக்கத்தான் வேண்டி இருக்கிறது.. அந்த குண்டு கன்னங்களில் ... ஆப்பிள் என்று எவனாவது ஹைக்கூ எழுதிவிட முடியும்... மெய் மறந்து அவள் சிரித்தால்......

ஒரு வழியாக அந்தக் காதலில் ஜெயித்து.. நிவின் செலின் திருமணம் நடக்கும் நாளில் நினைவுகள் திரும்பிய மலர், மறந்த மனுஷியாகவே வந்து போவதில் நெருங்கவே முடியாத தூரத்தில் இந்தக் காதல் இருக்கிறது... காதலை ஜஸ்ட் லைக் தட் கடக்க நினைப்பதே காதலுக்கு செய்யும் அவமரியாதை.. வெற்றி என்றால் காதலைக் கொண்டாடுங்கள்.. தோல்வி என்றால் காதலை கொண்டாட விடுங்கள்... காதல்.. இப்போதும் எப்போதும்... புதியவை... அது நிகழ்த்திக் கொண்டேயிருக்கும் மாய யதார்த்தத்தில் நான் மீண்டும் காதலிக்கத் துவங்கினேன்...

"உன் சிரிப்பு அய்.........யோ....."என்று மலரைப் பார்த்து நிவின் செய்யும் ஜாடையில் கிறங்கித் தவிக்கும் கேமரா, காட்சியாகி விட்டது என்றே நினைக்கின்றேன் .... அதற்கு மலர் தரும் சிரிப்பு ரி ஆக்சனில்...புதுக் கவிதை தொகுப்பை... கிப்ரான் மீண்டும் எழுதியது போல....

("அயோ... சும்மா மா.." ஒய்ப்... எதுக்கோ திட்டிட்டு இருக்கா இருங்க வந்தறேன்)

பிரேமம்.... காதல்....அப்புறம்... நியந்தா......

கவிஜி....

எழுதியவர் : கவிஜி (25-Oct-15, 12:19 am)
பார்வை : 270

சிறந்த கட்டுரைகள்

மேலே