கவிக்கோர் கவி

கவியின் இனிமையால்
தமிழுக்கு மகளானாள்
அளவில்லா அன்பினால்
எனக்குத் தாயானாள்...
தேன்மதுரக் குரல்லென
இனித்திடும் இவள் குரலின்
கொஞ்சிடும் மகுடிக்கு
மயங்கிடும் பாம்பானேன்...
பேசிடும் பொழுதினில்
கடந்திடும் மணித்துளியை
கட்டிப் போட்டிட
வரம் கேட்டேன்...
சாமிக்கும் அவள் குரல்
மந்திரம் ஆனதால்
கல்லுக்கும் உயிர்கிடைத்து
வரத்தினை மறு(ற)க்கின்றார்...