ஒரு கல் ஒரு விதை -ரகு

தன்னிலும் மிகச்சிறிய
எறும்பின் புரட்டலுக்கும்
இசைந்து நகர்ந்தபோது
கல்லின்
பலவீனம் புரிந்தது

சொட்டு சொட்டாகத்
தூர்ந்து போன
மழைகூட அதன்
கவசத்தைக்
கரைத்துப் பார்த்தது

கிளையின் பிடியிலிருந்து
பூக்களும்
நழுவிவிடாத காற்றுக்கும்
கல் சற்று
புலம் போக நேர்ந்தது

சற்று முன்புதான்
விழுந்து தெறித்த
பறவையின் எச்சத்திற்கு
தப்பித்திருந்தது அது

தற்போதும்
விழுந்து புதைந்து
துளிர்ந்தெழுந்த
விதை ஒன்றின்
வரலாற்றை யாரும்
கவனிப்பதற்கில்லை

விதையின் பார்வை
கனன்று தகித்த
சூரியன் மீதிருந்தது

எழுதியவர் : சுஜய் ரகு (25-Oct-15, 3:30 pm)
பார்வை : 89

மேலே