ஒரு வேள்வி ஒரு கேள்வி

வாழ்க்கை என்பது ஒரு வேள்வி !
அதை வாழ்ந்து பார்த்தால் எழும் பலகேள்வி !
அந்த தேர்வில் பலர்
அடைவது தோல்வி !
தோல்வி என்ன தோல்வி
அதை தோற்கடிப்பேன் பார் நீ
என்று வாழ்ந்து காட்டும் நீனே
எங்களின் முன்னோடி தானே ...

சாதாரணமானது உன்பிறப்பு
அசாதாரணமானது உன் இருப்பு
அசாத்தியமானது எல்லாம்
உன்னால் தன்னால்
அட! சாத்தியமானது !!

நாட்டைக் காத்தவரின் மகனாய்
நாற்பதுகளில் பிறந்தவரே
நற்குணங்கள் நிறைந்தவரே
நாவால் வாழ்வை புனைந்தவரே

நூல்களைப் படித்து படித்து
நூல்களை துணிநூல்களை
எடுத்து எடுத்து
ஆடைகளை வடித்து வடித்து
வாழ்க்கை வடம் பிடித்தவரே
எங்கள் இதயங்களில் இடம் பிடித்தவரே ..

நூலாளை அந்த மேலாளை
செங்கமலத் தாலாளை
கைபிடித்து வாழ்க்கையைப் படித்து
எல்லாம் பெற்று இன்புற்று இருந்த
உன்னுள் இருந்தது நிறைய பற்று
உன்னில் பாதியை உன்னுள் ஆவியை
அப்போது பீடித்தது புற்று ..
உன்னில் பாதிஆவி பிரிந்தபோது
கேவி இருப்பாய் சற்று
இங்குயருமில்லை பாவி
அந்த இறையை தினமும் சேவி !

காதோரம் விளைந்த நரை
எல்லோர் காதோரமும்
போய்சொல்லும் உன் முகவுரை
உணர்ச்சிகளின் நிலவறை
நிகழ்ச்சிகளின் நிகழ்வுரை
உன்னைப்பற்றி ஆற்றுது விரிவுரை !

கனிவான அண்ணனே...
எழுபது இனிதாய் மலரட்டும்
உன்னுள்ளம் இளசாய் என்றும் இருக்கட்டும்
இன்பங்கள் உன்னோடு உலவட்டும்
பல்லாண்டு பல்லாண்டு
நீ நலத்தோடு நல்வாழ்வு வாழ
எல்லோரும் எல்லோரும்
வாழ்த்தட்டும் ! வாழ்த்தட்டும் !!

எழுதியவர் : வசிகரன்.க (25-Oct-15, 1:01 pm)
பார்வை : 87

மேலே