கவிஞன்
வானவரிக் கோடு மின்னல் பார்த்ததுண்டு
வண்ணவரிக் கோடுகளால் ரவிவர்மாவாம்
கானல்வரி பாடியதால் தோற்றுப்போன
காதல்வரி பாடியவன் இளங்கோ மன்னன்
ஞானநெறி கூடியதால் புத்தரானார்
நல்லவரி பாடியதால் கண்ணதாசன்
மானகிரி வரலாற்றை சாமிநாதன்
மகன் கனவுதாசன் நான் எழுதவந்தேன்.