முடிவு

முடிவு

முடிவில்லாமல் தான் முடிகின்றன
பெரும்பாலான கூட்டங்கள்
முடிவோடு முடிந்தாலும்
செயல்கள் என்னவோ
முடிந்துவிடுவதில்லை.

முடிக்க முயலாதவர்களும்
முடிக்க முடியாதவர்களும்
முடிக்க இயலாதவர்களும்
முடிக்க விடாதவர்களும்
இருக்கும் வரை,
எதுவும் முடிந்து விடாது.

முடியாதவை என்பவை
முடியாதவை அல்ல.
என்ன சோகம் ?
மனிதன் மட்டும் முடிந்துபோகிறான்.

எழுதியவர் : கனவுதாசன் (26-Oct-15, 1:39 pm)
சேர்த்தது : கனவுதாசன்
Tanglish : mudivu
பார்வை : 40

மேலே