மனோரமா

மனோரமா

மானுடம் மகுடம் சூடிய
மரணப் பொழுது இது.

மரணத்தைத் தழுவா
மரணம் இது

புழு பூச்சிகளைப் போல்
போய்ச் சேர்ந்து விடாமல்
பிறந்து சிறந்து
இறந்து போயிருக்கிறார் !

காலம் என்னும்
நீளந்தாண்ட
கற்றுக் கொண்டே
பிறந்து வந்தவர் .

நாடக மேடைகள்
நலிந்த போது
சினிமா என்னும்
சிறகு தரித்தவர் !

இவர் வாழ்க்கை வரலாறானது
வரலாறு இவருக்கு வாழ்க்கைப்பட்டது .

நளின சிருங்கார
நடை மேடையில்
நகைச்சுவை பலூன்களால்
உயரம் தொட்டவர் .

இசையும் , உரையும்
இசைந்து கொடுத்தன .
இரவும் பகலும்
புரண்டு படுத்தன .

‘பொம்பள சிவாஜி’
என்ற பெயருக்குப்
பொருத்தமானவர் !

சினிமா இவரை
பயன்படுத்திக்கொண்டது .
இவரும் சினிமாவை
பயன்படுத்திக்கொண்டார் !

நடிப்பின் உயரங்களைத்
தொட்டுவிட்டு
நானா ? என்பதுபோல்
நகர்ந்து போனவர் !
இன்று
நகர்ந்து போய்விட்டார் !

எழுதியவர் : கனவுதாசன் (26-Oct-15, 1:40 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 193

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே