பயணி
இனிதாகத்தான்
நிறைவடைந்தது
பயணம்..
திரும்புகையில்
பயணக் கட்டுக்கள்
கூடுதலாக கனத்தன..
நினைவுகளின் சுமையால்..
நட்புக்களின் மனங்களை
திருடி எடுத்து வந்த
குற்ற உணர்வோடு
கட்டுக்களை பிரித்தேன்..
சந்தோஷப் பொட்டலங்களின் மீது
கொஞ்சம் காய்ந்து போன
கண்ணீர் கறைகளும்...
எனது மைக்கூடுகளில்
புதிய வண்ணங்கள் நிரப்பி
எழுத உட்கார்ந்து விட்டேன்...
*****************************************
ஜி ராஜன்