கனவுப் பட்டறைகள் - உதயா

அதி அழகான தோரணையில்
ஆழ் மனதினை சுண்டியிழுத்தன
கனவுப் பட்டறையில் பொங்கி வழியும்
அவளின் வாழ்வியல் கனவுகள் .

எண்ணங்களில் வண்ணங்களான
வசீகர தருணங்கள் மலர தொடங்கின
வர்ணங்களை பிரித்து
பாகுபாடு அறியா அவதொன்றிலே .

மணம் வீசிய பூக்களின் இதழ்கள்
மணமற்று பொளிவிழந்து போகின
மறைந்துக்கிடந்த முட்களின் தோற்றங்கள்
வெகுவாய் காட்சியாகின .

பறக்க கற்றுக்கொண்ட கணத்திலே
சிறகின் இறகுகள் உதிர்ந்துவிட்டன
மிஞ்சிய இறகுகளின் உதிர்வில்தான்
அவளது பிஞ்சுகளின் இறகுகள் துளிர்விட்டன

அன்று பொங்கி வழிந்த அவளது
கனவுப்பட்டறைகள் துளி கூட சிந்தாமல்
கானல் இரதமேரி கனவுகளாகியிருந்தன
இன்று வேறொரு என் கிராம கன்னிக்கு

எழுதியவர் : உதயா (26-Oct-15, 9:09 pm)
பார்வை : 95

மேலே