நன்னாளும் வாராதோ

நன்னாளும் வாராதோ ?
ஆயிரங்கண் உள்ளவனே சில்லோர் உன்னை
ஆண்டவனே எனக்கூறுங் கல்லே ! பெண்கள்
ஆயிரங்கண் னுடையினை மாற்றுதற்கே
அலைகின்றார் , ஆனாலும் முடியாராகி
நாயினுங்கீழ் மிருகமென நாட்டில் வாழ்ந்து
நலிவதனை ஓரக்கண்ணால் திறந்து பாராய் !
வாயினுக்கு கிடைத்திட்டால் வயிற்றிற் கின்றி
வாழ்வுதனை பாராத கண்ணா ? புண்ணா ?

புத்தாடைப் பளபளக்கும் , வாங்க வொன்னா
புழுப்போல துடின்கின்றார் விலையேற்றத்தால்
பத்தோடு பதினொன்றாய் கொடுத்து வாங்க
பணமின்றி காசின்றி கண்ணீர் சிந்தி ,
சத்தானப் பெண்களெல்லாம் உடுத்திப்போட
சந்தையிலே காசாக்கி விற்கக் கண்டு
பித்தாக சுத்துகின்றார் ஈக்கள் போல
பிசைக்க்கின்றார் காசின்றி கரத்தை அங்கே

மானமதைக் காத்திடவே பழைய ஆடை
மூடாத மேனியினை என்றே என்றும் ,
‘மேனகையும் வெட்கிவிட அழகைக் கொண்டோர்‘
மேனியினை மூடவழி இன்றி , மிக்க
கூநியுடல் கரத்தாலே மூடிக்கொண்டு ,
குனிந்தமுகம் நிமிராமல் மன்னைப் பார்த்து
நானிடவே செல்கின்றார் ! ஆடைக் கொள்ளும்
நன்னாலும் வாராதோ ? நாட்டில் இங்கே ?

எழுதியவர் : இராம்பாக்கம்.கவிஞர்.தன.கன (26-Oct-15, 7:51 pm)
சேர்த்தது : தமிழன் விஜய்
பார்வை : 94

மேலே