சீமந்தம்

சீமந்தம் எனும் நாடகம்
அரங்கேறியது...!
ஆம்,
முழங்கை வரை வலையளிட்டு,
முகத்திலே மஞ்சள் பூசி,
நெற்றியிலே திலகமிட்டு,
தலைநிறைய பூச்சூடி,
யாருமற்ற தனியறையில்..,
தனக்குத்தானே சீமந்தம் நடத்தி,
வயிற்றில் கட்டிய துணிமூட்டையை
குழந்தையை பாவித்து..,
தொட்டுப்பார்த்து,
மனதுக்குள்ளே மருகினாள்..,
மழலை வரம் இழந்த - அந்த
மலட்டுத்தாய்...!!!

எழுதியவர் : காயத்ரிசேகர் (26-Oct-15, 8:07 pm)
பார்வை : 425

மேலே