ஊக்கமது கைவிடேல்

பொறுத்து புவி செய்தது போதும்
தெறித்து நெறி செய்திடு..

இசைந்து வழி விட்டது போதும்
பிசைந்து விழி பிய்த்திடு..

அடங்கி மனு தந்தது போதும்
அடக்கி விதி வென்றிடு..

துடித்து மனம் நொந்தது போதும்
அடித்து உனை காத்திடு..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Oct-15, 10:59 pm)
பார்வை : 278

மேலே