விடிந்து விட்டது, எல்லாம் விளங்கி விட்டது

நிலாக்காலமில்லை,
இங்கெல்லாம்
நிஜக்காலம்..

பூக்கள்
மொய்க்கப்படுவதில்லை.
தேனீக்கள்
தெளிவு பெற்று விட்டன,
"நான் ஈ"
அனுபவம் ஆனது.
வெளிச்சம் தேடி தீக்குள்
விரலைவிட தயாரில்லை.

கற்றலின் தெளிது
காதலின் வழிமுறையானது,
தேவதாஸ் தாஜ்மஹால்
இனி வர இங்கே வழியில்லை..

தேடல்கள், தீண்டல்கள்
அப்பாவிகளுக்கு மட்டும்..

குளிர் காய்ந்து விலகிச்செல்ல
ஏமாறும் சோணகிரிகள்
இனியில்லை..

குறுகுறுப்பார்வை
இங்கே கோடியில் ஒன்று,
குருட்டுப்பார்வையில்
தடுக்கி விழுவது இங்கு
ஆயிரத்தில் ஒன்று.

காதல் ஊழல்
அறிந்து விட்ட
மகாஜனமும்
காலம் வைத்த வேள்வியில்
வென்று நிற்கிறது,
வெறித்து நிற்கிறது,
இனி விட்டில்களாய் வாழ
விருப்பமில்லை.

இளைய தலைமுறை
இனி ஒன்றும்
இளைத்தவரில்லை.

ஏதோ சின்ன சின்ன சிணுங்கல்கள்,
குறும்புகள், குடைச்சல்கள் ..
பார்வைகள் பேச்சுக்கள்
தடையின்றி,
பாஷைகள் புரிந்துணர்வு
இலகுவாகி

முடிச்சு அவிழா திருட்டுகள்,
மனசுக்குள் மட்டும் இருட்டுகள்..
இதுவும் இன்னுமொரு
கலாச்சார மேம்பாடு தானே!

எழுதியவர் : செல்வமணி (26-Oct-15, 11:58 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 95

மேலே