அவன் தான் மனிதன்
கொண்டு வந்தால் தான் அவன் அண்ணன்
தங்கைக்கு,
கொடுத்தால் தான் அவன் கணவன்
மனைவிக்கு ,
வென்றால் தான் அவன் வீரன்
பிள்ளைக்கு,
சிரித்தால்தான் அவன் நல்லவன்
பிறருக்கு,
பார்த்தால் தான் அவன் பரமசாது
பகைவனுக்கு ,
முட்டினால் தான் அவன் காளை
முரடனுக்கு ,
காத்திருந்தால் தான் அவன் காதல்
காதலிக்கு
,
காசு இருந்தால் தான் அவன் யோக்கியன்
அயலவருக்கு
,
சேவை செய்தால் தான் அவன் சேவகன்
முதலாளிக்கு,
உழைத்தால் தான் அவன் உயர்ந்தவன்
ஊருக்கு ,
எல்லாம் இருந்தால் தான் அவன் மனிதன்
மனிதருக்கு ,