மனிதம் போற்றும் மனிதர்

எழுதுகின்றேன் இவரைப்பற்றி.யார் இவர் .? பெரும் தலைவரா .? பெரும் புகழ்பெற்ற ஒருவரா.? வரலாற்றில் இவரின் பெயர் பதிக்கப்பட்டுள்ளதா .?
அல்லது என் உறவினரா .? அயல்வீட்டாரா .? இல்லை இவர் என் நாட்டாரா .? இவரை நான் பார்த்துள்ளேனா.?பழகித் தான் உள்ளேனா .? பேசி உள்ளேனா .? ம்ம்ஹும் ஏதும் இல்லை .இன்றிலிருந்து ஒரு வருடமும் எட்டு நாட்களுக்கு முன் எழுத்து எனும் கவிதை,கதைக்கான இணையதளம் ஒன்றில் உறுபினராக சேர்ந்தேன் .அங்கு தான் இவரின் புகைப்படம் பார்த்துள்ளேன் .சில நேரங்களில் இவரின் படைப்புகளும் படித்ததுண்டு .சில நேரங்களில் இவரை மனதிற்குள் திட்டியதும் உண்டு (மன்னித்து விடுங்கள் ஐயா )
உறுப்பினராகி சில மாதங்களின் பின் இவர் எழுத்து கவிஞர்களுக்கு விருது மற்றும் நூல் வெளியீடு என்று எண்ணம் பதித்து இருந்தார் .அப்போது நினைத்தேன் இந்த தளம் இவருடையது என்று .இவ்வளவு முயற்சி எவராவது சும்மா எடுப்பார்களா .? அப்போது தான் எனது கணிப்புகள் ஒவ்வொன்றாக தவாறாக தொடங்கியது .
யார் இவர் .? எதற்காக இதெல்லாம் செய்கிறார் .? எம்மைவிட ஒருவர் சிறப்பாக எழுதினால் இங்கு அடிவயிற்றில் உருண்டைகள் உருளும் எங்களுக்கு .இவர் என்ன என்றால் சிறந்த கவிஞர்கள் ,கவிதைகள் என்று தேடி விருதும் கொடுக்கிறார் .!
சொந்த செலவில் சூனியம் வைகிறாரா என்ன.?
கேள்விகள் மண்டையை குடைந்தாலும் சமாளித்துக்கொண்டேன்.ஆனால்
என் அனைத்து கேள்விகளுக்குமான பதில்
2015.10.18ம் திகதி நடைபெற்ற விருதளிப்பின் தொகுப்பு சந்தோஷ் அண்ணா எழுதிய கட்டுரையில் கிடைத்தது .அவற்றை படித்த பின்கண்கள் குளமாக தொடங்கியது .
அவரை பற்றி அறியும் ஆவல் அதிகமாகியது .இன்னும் எழுத்து தளத்தில் சில மூத்த கவிஞர்களிடம் கேட்டு அறிந்துகொண்டேன் .இப்படியும் ஒரு மனிதரா .??
தன்னைப்பற்றியே நினைக்கும் சுயநலவாத உலகில் பிறருக்கு ஏணியாகும் ஓர் உள்ளமா .?
ஆச்சர்யம் தான் ஆனாலும் உண்மை

எங்கோ பிறந்து எங்கோவளர்ந்து
எழுத்தாளர்கள் என்று மட்டுமே அறிந்திருந்தவர்களை ஒன்றிணைத்து விருதோடு ஊக்கமும் அளிக்கும் இவரைப்பற்றி
எழுதுவதில் மகிழ்ச்சியோடு கலந்த ஆடம்பரம் தான் எனக்கு .

அன்றாடம் பல முகங்களை காணுகின்றோம் அதில் சில முகங்களை வாழ்நாளில் பார்க்கவே கூடாது என்று எண்ணுகின்றோம் .எனக்கு ஒரு ஆசை.வாழ்நாளில் இவரை ஒருமுறையேனும் காண வேண்டும் ..
பொதுநலம் மரித்து சுயநலம் வாழ்கின்ற பூமியில் மனிதம்
வளர்க்கும் மனிதனிடம் கற்றுக்கொள்ளவேண்டும் நானும்.
இது முகஸ்துதி அல்ல .நன்றிக்கடன்.
அகன் (ஐயா )தங்கள் அகமும் அழகு ஐயா .
வாழ்த்தும் வயதில்லை எனக்கு இருப்பினும் வாழ்த்துகின்றேன் தாங்கள் வாழ வேண்டும் பலநூறாண்டு
வாழ்க வளமுடன் .

(எழுதுவதற்கு அதிகம் உண்டு மீண்டும் சந்திப்போம்)

எழுதியவர் : கயல்விழி (28-Oct-15, 12:18 pm)
பார்வை : 713

மேலே