விண்ணுலக ஆண்மகனோ
நகரத்து பருவ மங்கை
என்னவனை தேடுகையில்
நகரத்தில் காணலியே
கிராமத்தில் தேடுகையில்
என் பேரழகில் சொக்கி கொண்டு
ஜல்லிகட்டு கூட்டமெல்லாம்
ஆசையுடன் பின்தொடர
அந்த கூட்டத்திலே ஒருத்தன் மட்டும்
என்னை காணமல் அலச்சியபடுத்திவிட்டு
தன் உழைப்பிலே கண் மலர
என் மேனியெங்கும் சிலீர்த்திடவே
அவனில் நான் உள்ளத்தை இழந்துவிட
அவனெதிரில் போய் நின்றும்
அசையாத சிலைபோல
கள்ளமில்ல உள்ளம்போல
பாசத்தில் நோக்குகிறான்
பண்பிலே கலக்குகிறான்
அவன் கண்ணிலே காமமில்லை
என் பேரழகை ரசிக்கவில்லை
அன்பைமட்டும் ரசிக்கிறானே
காமம் தேடும் கூட்டம் விட்டு
கண்ணியமா இருக்கிறானே
நான் முடிவுக்கு வந்துவிட்டேன்
வாழ்ந்தாலும் இவனோடு
செத்தாலும் இவனோடு
தந்தையிடம் சொல்லிவிட்டேன்
தந்தையே அதிர்ந்துவிட்டர்
அவரும் சொல்லிவிட்டார்
காது கேக்கா பேசமுடியா ஊமையவன்
யோசித்து முடிவெடுன்னு
நானும்தான் சொல்லிவிட்டேன்
பேரம் பேசி உன் உழைப்பில் சாப்பிடறவன் வேணுமா
தன் உழைப்பில் எனக்கு சாப்பாடு போடறவன்
வேண்டுமா யோசித்து முடிவெடு என்று