மணப்பாடு -- அலை சவாரி

வலைகடலில்
தேடு இயந்திரம் ஏறி
சவாரி செய்தேன்
மணப்பாடு தகவல் திரட்ட!
எனக்கு தெரிந்த surfing இதுதான்!
ஆனால்
தேடலில் மணப்பாடு கிடைத்ததும்,
அங்கே ---
அலைகடலில் ---
பலகை ஏறி சவாரி செய்யும்
நீர் விளையாட்டு கண்டேன்!
அதன் பெயர் surfing என்றார்கள்!
விளையாட்டை பார்த்தேன்!
ஆகா!
அந்த surfing அன்றோ
வார்த்தைகளால் விவரிக்க முடியாத
அழகான அற்புதமான விளையாட்டு!
surfingஐக் காண்பித்த surfingகே நன்றி!

எழுதியவர் : ம கைலாஸ் (29-Oct-15, 2:57 pm)
பார்வை : 121

மேலே