அனாதை

அனாதை என்றுதான் யாருமில்லையே
அன்பு இருக்குதே இறைவன் படைப்பிலே
சொந்தம் கொண்ட உயிருக்கு அவர் சொந்தம் மட்டும் சொந்தம்
யாருமில்லா எங்களுக்கு உலகமே சொந்தம்

அனாதை என்றே அறியா குழந்தைகள்
அன்பு இங்கு ஆகுதே கேள்விக்குறிகள்
மக்களும் பெருமைக்காகத்தான் மனதை திறக்கிறார்
பெருமிதம் கிடைத்ததும் மனதை அடைக்கிறார்
அழிவின் விளிம்பை நோக்கி
இங்கு மனித நேயங்கள்
கலியும் முற்றும் நேரமோ
கல்கியே நீ வா
உலகின் வேகம் இன்று பயத்தை மூட்டுது

அன்னதானம் செய்யும் அன்பு தெய்வங்கள்
அறிவுதானம் கேட்கிறோம் பிச்சை போடுங்கள்
அனாதை என்று ஆனதால் அறிவில் பஞ்சமில்லை
அறிவை தேடிக்கொள்ளதான் வசதி வாய்ப்புமில்லை
உடலில் உள்ள ஊனம் அது ஊனமில்லை
உதவும் எண்ணம் இல்லா உள்ளம் ஊனமே
துன்பம் தீர்க்க நீளும் கைகள் யாவும் தெய்வமே
தன்னைப்போல் என்னை என்னும் தெய்வம் நீங்கள் அல்லவா

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (29-Oct-15, 3:41 pm)
Tanglish : anaadhai
பார்வை : 521

மேலே