மான் விழியாள் பெண்னொருத்தி

மான் விழியாள் பெண்னொருத்தி
என்னவனை தேடுகின்றேன்
சேறு நிறைந்த உலகந்தன்னில்
சேறு குளம் நோக்குகையில்
என் விழிபட்ட நேரத்திலே
அழகாக முகம் மலர்ந்தான்
செங்கமல தாமரையாய்
சேறு குளம் அலையடித்தும்
புன்னகைத்து சிரிக்கிறாய்
உன் புன்னகையில் தெரிந்து கொண்டேன்
எவ்வளவு அலையடித்தும்
சேறு உன்னில் ஒட்டாதென்று

எழுதியவர் : செல்வம் சௌம்யா (30-Oct-15, 2:28 am)
பார்வை : 79

மேலே