தீயே உனக்கு மரணம் வராதா

புன்னகையோடு பூத்து குலுங்கி

வண்ண வண்ண

மொட்டுகளாய்

மலர்ந்தோம் நாங்கள்

மொட்டுலே கிள்ளிய காரணம்

என்ன சொல் தீயே !

புள்ளி மான்களாய்

துள்ளி திரிந்த எங்களை

புல்லுக்கு இரையாக்கிவிட்டாயே

இது நியாயமா தீயே !- நாங்கள்

உனக்கு செய்த பாவம்

என்ன சொல் தீயே !

வண்ணத்து பூச்சிகளாய்

சிறகடித்து பறந்தோம் - நாங்கள்

ஆனால்

எங்கள் சிறகுகளை தீவைத்து

கொளுத்திய காரணம் என்ன

சொல் தீயே !

மழலை செல்வமாய்

இருந்த எங்களை

மரண ஓலையில் - படுக்க

வைத்த காரணம்

என்ன சொல் தீயே !

எங்கள் கதறல்கள்.

உனக்கு என்ன தாலாட்டா .........

சொல் தீயே ! -உனக்கு

முற்று புள்ளியாக - எங்கள்

அழுகை குரல்களை

காணிக்கையாக்குகிறோம் .

எழுதியவர் : நாகராஜன் வள்ளியூர் (6-Jun-11, 5:44 pm)
சேர்த்தது : M . Nagarajan
பார்வை : 316

மேலே