எட்டுத்திக்கும் மதயானை என்ற நாவலில் நிகழ்வுகள் சித்தாிக்கும் இன்றைய சமுதாயம்
‘எட்டுத்திக்கும் மதயானை நாவல்’ நாவலில் நிகழ்வுகள் சித்தரிக்கும் இன்றைய சமுதாயம்
முன்னுரை
இக்கால இலக்கியங்கள் இன்றைய சமுதாயத்தைத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. குறிப்பாக நாவல் இலக்கியம் ஒரு சமுதாயத்தை அதன் கூறுகளை விரிவாக உணர்த்தும் வகையில் உள்ளன. நாஞ்சில் நாடனின் ‘எட்டுத்திக்கும் மதயானை’ எனும் நாவல் சமுதாயத்தையும், தனிமனித நடத்தையையும் நுணுக்கமாகச் சித்திரிக்கிறது. இந்நாவல் விளக்கவியல் அணுகுமுறையில் அணுகும்போது இன்றைய சமுதாயத்தில் படிந்துள்ள பல்வேறு குற்றங்களையும், தனிமனிதனின் வாழ்வியல் உணர்வுகள் மூலம் அறிய முடிகின்றது.
விளக்கவியல் அணுகுமுறை
விளக்கவியல் ஆய்வுமுறை, பொதுவாக முடிவுகளை அடைவதற்கும், சுருக்கமாகவும், தெளிவாகவும் கோட்பாடுகளை அறிந்து கொள்வதற்கும் துணைநிற்கும் உண்மைகளைக் கண்டுபிடித்துக் கூறுவது என்பதைவிட அறிவுலகின் சிக்கல்களை விளக்கி அவற்றை அணுகுவதற்குரிய வழிமுறைகளைத் தெரிவிப்பதற்கும் விளக்கவியல் ஆய்வே துணைநிற்கிறது. (கு.வெ.பாலசுப்பிரமணியன், ஆராய்ச்சி முறைகள், பக்.79) என்ற விளக்கவியலின் அணுகுமுறை நாஞ்சில் நாடனின் நாவலை மாறுபட்ட கோணத்தில் அறியும் வாய்ப்பைத் தருகின்றது.
நாவலின் இலக்கணம்
நாவல், நிகழ்ச்சிகளின் குவியலோ கோர்வையோ அல்ல. நிகழ்ச்சிகளின் தேர்வு, தேவை, அணுகுமுறை, முன் வைக்கப்படும் வடிவம் இவை ஒரு நாவலுக்கு இன்றியமையாத ஒன்றாகும். நேற்றைய நாவலாசிரியனுக்கும் வாசகனுக்கும் இவ்வுணர்வு இருந்தது. நிகழ்ச்சிகள் பெரும்பான்மையும் நாவலுலக மனிதர்களின் மன உணர்வுகளைத் துலங்குவன. இந்த நுட்பங்களையெல்லாம் முந்தைய நாவல்களில் காணலாம். இன்றைய நாவலில் நிகழ்ச்சி சித்திரிப்புகள், அதன் செயற்கைத் தன்மை, உணர்ச்சி கொந்தளிப்பின் அருவருப்பான வெளிப்பாடு ஆகியவை தவிர்க்கப்படுகின்றன.
இன்றைய நாவலில் நிகழ்ச்சிகள் உறுதியற்ற பிணைப்புகளைக் கொண்டுள்ளன. முதல் வாசிப்பிலேயே இணைப்புகள் சுழன்று வௌ;வேறு கோணத்தில் வாசக நிலைக்கு முழுமை தந்து விடுகிறது. நிகழ்ச்சிகளுக்கு இடையிலமைந்த மௌனம் வாசகனைப் பேசத்தூண்டுகின்றது. நாவல் முன்வைக்கும் வாழ்வு படைப்பாளனுடையதுதான். ஒரு படைப்பாளன் காணாத ஆழத்தை வாசகன் உணர முடியும். இன்றைய நாவலின் நுட்பத்தை உணர்ந்து வாசிப்பினை நிகழ்த்த இயலும்.
நாஞ்சில் நாடனின் நோக்கம்
சுப்பிரமணியம் என்ற இயற்;;பெயர் கொண்ட நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாட்டு சித்தூரில்(வீரநாராயணமங்கலம்) பிறந்தார். நெருக்கடி மிகுந்த நகரமான மும்பையில் குடியேறி, வேலைக்காக அலைந்து திரிந்தவர். இத்தகைய அனுபவமே அவரது படைப்புகளுக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது.
‘எட்டுத்திக்கும் மதயானை’ கிராமிய சூழலில் நிகழும் ஒரு வன்முறை நிகழ்ச்சியை முன்வைக்கிறது. பூலிங்கம் என்ற கல்லூரி மாணவன் ஒரு தாழ்த்தப்பட்ட குயவர் இனத்தைதச் சார்ந்தவன். கல்லூரியிலிருந்து இடைமறித்து உயர்சாதி வேளாளர்களால் தாக்கப்படுகின்றான். பெண் குறித்த தகறாறு இல்லையெனில் வேறொரு புரிதல் என வைத்துக்கொள்ளலாம். இக்கதை செண்பகத்தை மையமாக வைத்துப் படைக்கப்பட்டுள்ளது. இதில் படைப்பாளியின் நோக்கம், தாக்கப்பட்டவரின் மன உணர்வுகளையும், தாக்கியவர்களின் வன்முறை குணத்தையும் வெளிக்காட்டுவதாக அமைகின்றது.
வன்முறையை மென்முறையில் காட்டும் பாங்கு
பூலிங்கத்தை தாக்குவதற்கான தேர்வு செய்யப்பட்ட இடம் கிராமத்து உணவு விடுதி. பெரும் பான்மையான மக்கள் வந்து போகின்ற இடம். ஒருவேளை உயர் சாதி என்பதால் மக்களின் மத்தியில் தம் பலத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காகப் படைப்பாளன் இவ்விடத்தைக் களமாகப் படைத்திருக்கலாம். தெய்வ நாயகம் பிள்ளை அவர் மைத்துனர் ஆறுமுகம் பிள்ளை இவர் சேக்காளி சுப்பையா இவர்களோடு தெய்வநாயகம் பிள்ளையின் மகன் திரவியம். இவன் பூலிங்கத்தின் வகுப்பில் படிக்கின்றான். பூலிங்கத்தின் தாக்குதலில் இவனின் பங்கு முக்கியமானது. பூலிங்கத்திடமிருந்து புத்தகங்களைப் பிடுங்கி எரிகின்றான். கடைசி அடியும் இவனுடையதுதான். செண்பகத்தின் தந்தை தெய்வநாயகம்பிள்ளை பூலிங்கத்தின் குறியைத் தாக்குவதும் அதையே குறியாகக் கொள்கின்றான் என்ற செய்தி நாவலில் மீண்டும் மீண்டும் வருகின்றது.
ரெய்ச்சூர் இரயில் நிலையத்தில் பூலிங்கம் ஒருவனின் குடலை சரித்து விடுகின்றான். இந்த வன்முறை நிகழ்ந்த தன்மையை நாவலில் முன்வைக்கப்படவில்லை. பூலிங்கம் ரெய்சூரிலிருந்து தப்பி ஓட முயலுகின்றான். அதற்குக் காரணமான நடந்த நிகழ்ச்சிகள் தேவையான அளவிற்கு மட்டுமே விவரிக்கப்படுகின்றது. வாசகனுடைய கவனம் வேறொரு இடத்தில் நிலைத்து நிற்பதற்கான சந்ததர்பத்தை நாவல் தரவில்லை.
பூலிங்கம் வாழ்வியல் உணர்த்தும் எதிர்மறைத் தாக்கம்
இந்நாவலில் பூலிங்கம் சுசிலாவின் உறவு, இவ்வுறவைப் புரிந்து கொள்ளும் விதத்தில் நேரடி நிகழ்வுகள் சித்தரிக்கப்படவில்லை. ஓரிரவு மட்டுமே இவர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள். உடலுறவு அதற்கான முயற்சிகள் எதுவுமில்லை. பூலிங்கத்தின் குழந்தையை அவள் அடைந்திருப்பது நிகழ்வுகள் முன்வைக்கின்றன. கிராமத்தை விட்டு பூலிங்கம் வருவதற்கான தூண்டுதல் சுசிலாவிடமிருந்து வெளிப்படுகின்றது. அவன் மறைமுகமாக இவனைக் கண்டு பணம் கொடுத்து அனுப்பி விடுவதுமான செய்திகள் நாவலில் இடம்பெற்றுள்ளன. நாவல் முழுவதிலும் இவர்களுடைய உறவு குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூலிங்கம் நினைவு கூர்தல்களிலிருந்தும், சுசிலாவின் நினைவு கூர்தல்களிலிருந்தும், பூலிங்கம் செண்பகம் உரையாடல்களிலிருந்தும், செண்பகம் சுசிலா உரையாடல்களிலிருந்தும் வாசகனுக்கு இவர்களின் உறவைப் பற்றி புரிந்துகொள்ள அனேக செய்திகள் இருக்கின்றன. நாவலின் முற்பகுதியில் சுசிலா, செண்பகம் உறவுகள் மறைவாகவே சுட்டப்படுகின்றது. நாவலின் இறுதியில் விரிவாக விளக்கப்படுகின்றது. சுசிலா, செண்பகம் உறவுமுறை சந்தேகத்திற்கு இடமளிக்கின்றன. சுசிலா உயர்சாதி பெண், செண்பகம் தாழ்ந்த சாதியில் பிறந்தவள் இருவரின் உறவுமுறை இறுதியாகவே சுட்டப்பட்டுள்ளதால் படைப்பாளன் கதை கோர்வைக்காக இவ்வாறு படைத்துள்ளார் என்று தோன்றுகின்றது. பூலிங்கத்திற்கான உடலுறவு வேறுபாடு இவர்களிடையேயான உறவின் தன்மை என அனைத்தும் வாசகர்களின் புரிதலுக்கே விடப்படுகிறது. உடலுறுவு எதேட்சையான நிகழ்வு ஆனால் பூலிங்கத்தினுடையது அல்ல. சுசிலாவினுடையது என்றும் நாவல் கூறவில்லை. உடலுறவு அச்சம் நிறைந்த சூழலில் வேப்பமரத்தினடியில் நிகழ்ந்தது. எல்லாம் நடந்த பின் அக்கா என்ன அக்கா என்று புது உறவை ஏற்றுக்கொள்ளும் சுசிலாவின் மனநிலை, நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு பூலிங்கத்தின் இருப்படத்தைச் செண்பகத்தின் மூலம் தெரிந்து கொண்டு மகளின் பகைப்படத்தை அவனுக்கு அனுப்பிவைத்து, மனம் நெகிழ்வடையும் பூலிங்கம் நினைவலைகளில் சுசிலா குறித்தான நினைவுக் கால இடைவெளிகளில் மோதுகின்;றன. செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட நான் செய்த குற்றத்திற்காக தண்;டிக்கப்படவில்லை என்ற குற்ற உணர்வு இறுதியில் வெளிப்படுகின்றது. நாவலின் முடிவிற்குப் பின்னும் கூட பூலிங்கத்தின் வாழ்வில் எதி;ர்காலச் சிக்;;;;;;கல் சுசிலாவைக் குறித்தாக அமைகின்றது.
பூலிங்கம் வாழ்வு எல்லா ஒழுக்க மரபுகளையும் உடைத்தெரிகிறது. இவன் உடலுறவு கொள்ளும் பெண்கள் எல்லோரும் இவனைவிட மூத்தவர்கள். சுசிலா, கோமதி, பானுமதி அனைவரும் மூத்தவர்கள். குற்றமும் தண்டனையும் பூலிங்கத்தை மிகுந்த நெருக்கடிக்குள்ளாக்கும் வாழ்வின் சூழல், குற்றங்களை நோக்கிப் பூலிங்கம் இனம் தெரியாத கரங்களால் தள்ளப்படுகின்றான். குற்றத்திற்கான தூண்டுதல் தன்னுள் ஒழிந்திருப்பதை அவனால் உணரமுடியவில்லை.
‘எட்டுத்திக்கும் மதயானை’ வாழ்வு குறித்தான தன்னுடைய விருப்பங்களைக் கைகொள்ள வாய்ப்பு மறுக்கப்பட்ட ஓர் இளைஞனின் வாழ்கை அனுபவங்கள் எதிர்பார்புகளில் ஏமாற்றங்கள் ஒருபுறமென்றால் வாழ்வில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள இவன் தொடர்ந்து போராட வேண்டியதாகி இருக்கிறது. இவனுக்கு நாளை மற்றொரு நாள் என்களின்றார் நாஞ்சில் நாடன்.
முடிவுரை
இன்றைய சமுதாயத்திற்கு நேரடியான அறிவுரைகள் ஏற்புடையன அல்ல என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்ட நாஞ்சில் நாடன் புது உத்தியைக் கையாளுகிறார். கசப்பான மருந்தை தேன் கலந்து தரும் பாங்காக, நாவலின் நிகழ்வுகளை அமைத்துள்ளார்.
வன்முறை எண்ணம் ஏற்புடையதல்ல என்பதை மறைமுகமாக வன்முறையையும் மென்முறையில் விளக்குகிறார்.
மேலும், கற்பு பிறழ்ந்த வாழ்வியல் சமூகக்கேடு என்பதை பூலிங்கம் வாழ்வியல் நிகழ்ச்சிகளால் உணர்த்துகிறார். நாஞ்சில் நாடனின் உணர்வுகளை, விளக்கவியல் அணுகுமுறையால் மட்டுமே அறிய முடியும் என்பது உணர்த்தப்பட்டது.