கோடுகள் கோலங்கள் என்ற நாவலில் வரும் பாத்திரங்களின் பண்பு நலன்கள்
‘கோடுகள் கோலங்கள்’ என்ற நாவலில் வரும்
பாத்திரங்களின் பண்பு நலன்கள்
முன்னுரை
நாவல் என்பது ஒரு தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் உள்ள உறவு முறைகள். அவற்றில் அடியாகத் தோன்றும் தனிமனிதப் பிரச்சினைகள், சமுதாய நிலை, அந்நிலையை உணர்த்தும் மனித நடவடிக்கை, சமுதாய மாற்றம் அம்மாற்றத்தால் மனித நடவடிக்கையில் ஏற்படும் மாற்றம் ஆகியன பற்றிய பூரண அறிவுடனே எழுதப்படுகிறது. அதுமட்டுமல்லாது அந்த நாவலின் தலைப்பிற்கு ஏற்ப கதாபாத்திரங்களின் உருவாக்கம் ஆகியவற்றின் காரணமாக நாவல்கள் வளர்ச்சி அடைகின்றன. பண்டைய காலங்களில் மக்களிடையே சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்த கவிஞர்கள் கவிதைகளாக மக்களுக்கு தெரியப்படுத்தினார்கள். மேலை நாட்டினரின் வருகைக்குப்பின்தான் தமிழ் இலக்கியத்தில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது.அவர்களின் வருகைக்குப்பின் நாவல் எழுதத்தொடங்கினார்கள். அது மட்டுமல்லாமல் நாவலில் தன் கற்பனையையும் உட்படுத்தி எந்த கதைக்கும் இரண்டு வேறுபட்ட கதாப்பாத்திரங்களைக் கொண்டு கதை எழுதும் போதும் ஒரு புதிர் போல நமக்கு தோன்றுகிறது ஆனால் இறுதியில் அந்த கதைக்கு ஏற்றவாறு கதாப்பாத்திரங்கள் ஒன்றாக இணைகின்றது. அதே போல் நாவலாசிரியர் டாக்டர் ஹிமானா சையத்; அவர்கள் எழுதிய நாவல் ‘கோடுகள் கோலங்கள்’ என்னும் நாவல் இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது. கல்வியின் இன்றியமையாமை, சமூகத்தின் மதிப்பு ஆகியவற்றை மிகச் சிறப்பாக நாவலாசிரியர் டாக்டர் ஹிமானா சையத் அவர்கள் தம் நாவலில் புகுத்தியுள்ளார்.
ஆசிரியர் குறிப்பு
டாக்டர் ஹிமானா சையத் அவர்கள் ‘கோடுகள் கோலங்கள்’ என்ற நாவலின் ஆசிரியர் ஆவார். இஸ்லாமிய தமிழ் புனைகதைகளை அதிகளவிலும், புதிய அழகிலும் எழுதி தனது முத்திரையினை ஆழமாகவும், அழுத்தமாகவும் பதித்து வருபவர். ‘உலகிலேயே நான் உயர்வாய் மதிப்பவை நறுமணமும் நற்குணப் பெண்டிரும்’ என நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளார். ‘அன்னையர் காலடியிலே சொர்க்கம்’ எனவும் கூறிப் பெண்ணினத்தைப் பெருமைப்படுத்தியுள்ளார். இத்தகைய பெண்ணினத்தின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது இந்நாவல். இந்நாவல் பெண்ணிணத்தின் பெருமையையும், பெண் கல்வியின் இன்றியமையமையாமையும், சமூகத்தின் மதிப்பு ஆகியவற்றை கூறுகின்றது.
பாத்திரங்களின் பண்பு நலன்கள்
சித்தி ஹசீனா
நல்ல கல்வியறிவும் ஒரு மதிப்புடைய பெண்ணாகவும் சிறந்த மருத்துவராகவும் விளங்குகின்றாள்;. ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ராவுத்தரின் மகளாவாள். பல இன்னல்களுக்கிடையில் படித்து ஒரு மருத்துவராக பணியாற்றுகின்றாள். இறக்ககுணமுடைய, பிறருக்கு உதவும் மனப்பான்மையும் உடையவள்.
சித்தி சமீரா
தன் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு ஒரு குடிகாரக் கணவனுக்கு வாழ்;க்கைப்பட்டு, வாழ்க்கையில் பெரிதும் துன்பம் அடைகின்றாள் அவளுடைய வாழ்க்கை நொடிந்து போய் விடுகின்றது. தன் குடும்பத்தை நிலைநிறுத்தப் போராடுகின்றாள் உயர் கல்வி மறுக்கப்பட்ட கதாப்பாத்திரமாகக் காணப்படுகின்றாள்.
ரபீக்
ஒரு பேராசிரியராகவும், எல்லோருக்கும் உதவும் மனப்பாண்மை உள்ளவனாகவும், ஒரு வேலையைக் கொடுத்தால் எந்த வித பாகுபாடுமின்றி செய்பவனாகவும் காணப்படுகின்றான்.
ஜாபர்
இவன் மெக்கானிக் தொழிலாளி. தான் வேலை செய்து கிடைக்கக்கூடிய பணத்தை குடித்தே அழித்து விடுகின்றான். தீய குணம் படைத்தவன்.
காதர் ராவுத்தர்
முடி வெட்டும் தொழிலாளியாக இருந்து, பல இன்னல்களையும் துன்பங்களையும் சகித்து தன் குழந்தையை படிக்க வைத்து சமூகத்தில் ஒரு அந்தஸ்து பெற்றவர். எந்தக் காரியத்திலும் ஒரு குறிக்கோளுடன் செயல்படுபவர்.
அமீர் ராவுத்தர்
தன் வாழ்க்கையில் சந்தோஷம் இருந்த நோரத்தை தொலைத்து விட்டு , வாழ்க்கையில் சந்தோஷம், நிம்மதி என வலுவிழந்து நிற்ப்பவர் இதற்கு காரணம் இவரது மனைவி மக்கள்.
மன்சூரா பீவி
பிடிவாத குணமுடையவள். தன் பிள்ளையை பள்ளிக்கு அனுப்ப மறுக்கின்றாள். யாருக்கும் மதிப்பு மரியாதை கொடுக்காதவள். வுhழ்க்கையில் உயர்நிலையில் இருந்த இவள் புற்று நோய் ஏற்பட்டு பல இன்னல்களை அனுபவிக்கின்றாள்.
கருப்பாயி பாட்டி
சாதி, மதம், இனம் என்ற பாகுபாடின்றி உதவும் பெண்மணி. தனக்கு யாரும் இல்லையென்று ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. இந்த பரந்து விரிந்த உலகத்தில் உள்ளவர்கள் தான் தன் சொந்தம், பந்தம் என நினைப்பவள். யாராவது அவளைக் கோபப்படுத்தினால் தகாதவார்த்தைகளால் திட்டித் தீர்ப்பாள். ஆனால் அவர்களுக்கு ஒரு ஆபத்து என்று வந்தால் ஒரு தாய் எவ்வளவு வேதனை அடைவாளோ அந்த அளவுக்கு வேதனை அடைவாள். இவளைப் பார்ப்பதற்கு ஒரு பாமரப் பெண்ணாக காணப்படுவாள். ஆனால் மனதார நேசிப்பால் அன்பை எல்லோருக்கும் நல்குவாள்.
கதைச் சுருக்கம்;;;
புதுக்குடி என்ற கிராமத்தில் செல்வ செழிப்புடன் இருந்த அமீர் ராவுத்தருக்கு செல்ல மகளான சித்தி சமீரா. அவர்களது அரவணைப்பில் வாழ்ந்த ஏழைத் தொழிலாளியான காதர் ராவுத்தரின் அன்பு மகள் சித்தி ஹசீனா. சித்தி சமீரா, சித்தி ஹசீனா இருவர்களும் நன்றாக படிக்கக் கூடியவர்கள் எதிலும் சுறுசுறுப்பு நிறைந்தவர்களாய் இருந்தனர். அப்படி இருக்கும் போது அவர்களின் வாழ்வில் புயல்வீசி விட்டு போனது போல மாறிவிட்டது. சித்தி ஹசீனாவின் கனவுகளெல்லாம் தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்ற இலட்சியத்துடன் படிக்கின்றாள். சளித்தி சமீரா எல்லா வகையிலும் முனைப்பான பெண்தான் அவளை படிக்க வைத்தால் மிகப்பெரிய எல்லையை எட்டுவாள். ஆனால் சமீராவின் தாய் மன்சுராவின் பிடிவாத குணத்தால் சமீரா, பெரியவள் ஆனவுடன் ஆரம்பக் கல்வி முடிந்து உயர்க்கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகின்றது. சித்தி சமீரா, சித்தி ஹசீனா இருவரும் இரட்டை பிள்ளைகள் என்றும் ஒரே வீட்டின் பிள்ளைகள் என்று சொல்லுவார்கள்;. ஏனென்றால் முகச்சாயல், நிறம், உயரம், அறிவு, குணம், பாங்கு, பழக்கவழக்கங்கள் எல்லாவற்றிலும் ஒற்றுமையாக இருந்தார்கள்;. அமீர் ராவுத்தரின் அரவணைப்பில் வாழ்ந்த காதர் ராவுத்தரை மன்சூராபீவி; கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்து விடுகிறாள். இதனால் மனமுடைந்த காதர் ராவுத்தர் அவர்களைவிட்டு பிரிந்து செல்கின்றார். இனிமேல் சித்தி சமிராவை காண முடியாது, பேச முடியாது என சித்தி ஹசீனா வருத்தத்துடன் பிரிந்து செல்கின்றாள். சித்தி சமீரா தன் தாயின் பிடியில் சிக்கி மிகவும் துன்பமடைகின்றாள். ஓரு நாள் சித்தி ஹசீனா பள்ளிக்கூடம் போகும் போது சமீராவின் மச்சு வீடு தெரிகின்றது அப்பொழுது சிறுமி கரீமா ஒரு கடிதத்தை ஹசீனாவிடம் வந்து கொடுக்கின்றாள். சமீரா தன் உணர்ச்சிகளையெல்லாம் வார்த்தைகளாக எழுதியிருந்தாள். ஹசீனா அதை படித்துவிட்டு சமீராவைக் கண்டவுடன் இருவரும் கட்டிப்பிடித்து கண்ணீர் வடிக்கின்றனர். சிறிது நேரத்தில் மன்சூராபீவி வந்து அறையைப்பார்க்கின்றாள். இருவரும் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கின்றார்கள். மன்சூராபீவி பத்ரகாளியாய் உருமாறுகின்றாள், ஹசீனாவை தன் வலதுகையால் பிடித்து கம்பியை பழுக்க காய்ச்சி சூடு வைக்கின்றாள். வலி தாங்க முடியாமல் ஹசீனா துடிதுடிக்கின்றாள். இதைக் கண்ட காதர் ராவுத்தரும், நபீசாவும் ஹசீனாவைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் சேர்க்கின்றார்கள். சில நாட்களுக்குப் பிறகு காதர் குடும்பத்தோடு கிராமத்தை விட்டே சென்றுவிடுகின்றான். பிறகு அவனுடன் எந்தத் தொடர்பும் இல்லை. சமீரா தினமும் அழுது மெலிந்து வீட்டிற்குள்ளாக அடைபட்டுக் கிடக்கின்றாள். சமீராவை அவளது மாமி மகன் ஜாபருக்குத்திருமணம் செய்து வைக்கின்றார்கள். அவள் குடும்பம் என்னும் வட்டத்தினுள் சிறைபிடிக்கப்படுகின்றாள். அவன் தினமும் குடித்துவிட்டு எங்காவது விழுந்து கிடப்பான். இதனால் தன் செல்வங்களையெல்லாம் இழந்து, புதுக்குடி கிராமத்தைவிட்டே செல்கின்றான்.
காதரும் நபிசாவும் தங்களை வருத்திக் கொண்டு தன் மகளை மருத்துவராக்கி ரபீக் என்ற பேராசிரியருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். சமீராவின் தாய் நோய்வாய்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றாள். அங்கு ஹசீனா எம்.டி.எம்.ஜி.ஓ என்ற பெயர் பலகையைப் பார்க்கின்றாள். பார்த்த உடனேயே அதிர்ச்சியடைகின்றாள். ஹசீனாவைப் பார்க்கின்றாள் ஆனால் ஹசீனாவின் கணவனுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவளால் நின்று பேச முடியவில்லை. சிறிது நாள் கழித்து ஹசீனாவின் மனதில் இளமைக்கால நினைவுகள் வருகின்றது சமிராவை சந்திக்கின்றாள். கவலைகளையெல்லாம் மறந்து மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
மையக்கருத்து
கோடுகள் கோலங்கள் என்ற நாவலில் முக்கிய கருத்து இஸ்லாமியப்பெண்களுக்கு கல்வி கற்க வைக்க வேண்டும். இஸ்லாமியப் பெண்களுக்கு கல்வி காலங்காலமாக மறுக்கப்பட்டே வந்துள்ளது. அடுப்பூதூம் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற அலட்சிய மனப்பான்னையே இதற்குக் காரணம். இச்சமூக சீர்கேட்டினைப் போக்கிட வேண்டும் என்ற ஆர்வமே ஆசிரியர் இந்நாவலைப் படைத்துள்ளார்.
முடிவுரை
எல்லா மனிதர்களின் கரங்களிலும் இறைவன் எழுதுகோலைக் கொடுத்து விடுகின்றான். அதை வைத்துக் கொண்டு சிலர் போடும் கோலங்கள் நேர் கோடுகளாகவும், பார்த்து ரசிக்கும் அழகுக் கோலங்களாகவும் ஆகிவிடுகின்றன. ஆனால் சிலர் தன் வாழ்க்கையில் போடும் கோலங்கள் கோணலாகிப் போகின்றன. அதேபோல்தான் இந்நாவலில் வரும் இரண்டு கதாப்பாத்திரங்களான ஹசீனா, சமீரா ஆகிய இருவரின் வாழ்க்கை முறையும் ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது இந்நாவலில் ஆசிரியர் இஸ்லாமியப் பெண்கல்வியை வலியுறுத்துவதைக் குறியாகவும், நெறியாகவும் கொண்டுள்ள இந்நாவல், இஸ்லாமிய தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றிலேயே ஆசிரியர் இட்டுள்ள அழுத்தமான கருத்துக்களும், அற்புதமான கதாப்பாத்திரங்களும் இந்நாவலின் மூலம் வெளிக்காட்டுகின்றார். அதுமட்டுமல்லாமல் நபிகள் நாயகத்தின் நன் மொழிகளும் நாவலின் மூலம் அறிய முடிகின்றது.
ழூழூழூழூழூழூழூழூழூழூழூ