ஸ்ரீரங்கத்து தேவதைகள்
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
சமீபத்தில் பழைய புக் கடையில் 20ரூக்கு கிடைத்தது ஸ்ரீரங்கத்து தேவதைகள்.
சுஜாதாவை கொஞ்சகாலமாய் பிடிப்பதால் சும்மா வாங்கி வாசித்து பார்க்கலாமென வாங்கினேன்.
கதை சொல்லி போகும்போக்கு வித்யாசமாய் இருந்தது.நாமும் இப்படி ஒரு எழுத்தாளனாய்
இருக்க வேண்டுமென்ற எண்ணத்தை தூண்டியது(உண்மையான படைப்புகள் இப்படி தோன்றசெய்யும்).
பால்யகால நினவுகளை எந்தவித அலங்காரம் ஒளிவுமறைவின்றி அப்பட்டமாய் எழுதிய படைப்பு.
எல்லாருக்குமே பால்யகால நினைவுகள் இருக்கவே செய்கின்றன.கண்டிப்பாக அனைவருக்குமே
குறைந்தது பத்து வயது வரையிலான பால்யகாலம் ஏதோ ஒரு ஊரிலோ அல்லது வேறு தெருவிலோ
கழிந்ததாக இருக்கிறது. வளர வளர அவை நினைவிலிருந்து மங்கி தூசடைந்து போய்விடுகிறது.
திரும்பி பார்ப்பதால் என்ன கிடைத்துவிடபோகிறது என்ற எண்ணத்தில் செல்ஃபி எடுத்தோமா
fbலயோ whatsupலயோ போட்டு லைக் வாங்கிட்டு அடுத்து வேலைய பார்க்க போய் விடுகிறோம்.
ஆனால் லைஃப்ல ரொம்ப கொண்டாட்டமான காலம் பால்ய காலமாகவே இருக்கிறது.(அது எத்தனை
கேவலமாய் அவமானமாய் இருந்தாலும்).அப்பா,அம்மா விளையாட்டு விளையான்ட பக்கத்து வீட்டு தோழிகள்.
நண்பனுடன் சண்டைபோட்டு சில்லுமூக்கை உடைத்து கொண்ட நாட்கள்.ஸ்னேகம் பிடிக்க முயன்ற
புதுசாய் திருமணமான எதிர்வீட்டு அக்காகள், வெகுளிதனமாய் திரிந்த நாட்களது.
இவற்றையெல்லாம் பக்கத்திற்குபக்கம் நினைவு படுத்தியது ஸ்ரீரங்கத்து தேவதைகள்.
சுஜாதாவிடம் ரெண்டாவதாய் ரசித்த விசயம் எந்த ஒரு பத்தியையும் நசநசவென்று வர்ணித்து
இழுத்து கொண்டிருக்காமல் நேரடியாய் சொல்லிவிட்டு சட்டென முடித்து விடுவது.(நமக்குதான் அதை
ஜீரணித்துகொள்ள கொஞ்ச நேரமாகும்).