நானும் நாமும்

நான் என்ற வார்த்தையில் மமதையை ஒழித்து,
நாம் என்ற வார்த்தையில் உறவைத் தேடி,
அன்பை விதைக்க பார்க்கிறேன்!!!
கண்ணின் காட்சிக்கு வெகுளித் திரை இட,
மனதின் மூச்சுக்கு உண்மை ஆசான் உரமிட,
உயர்வுதாழ்வை ஒழிக்க விழைகிறேன்!!!
புயலில் பயணிக்கும் ஓடமாய் மனம் பயணித்தாலும்,
சேற்றில் பூத்த மலர்போல் மணம் பரப்ப,
மனதை செப்பனிட எத்தனிக்கிறேன்!!!
கண்ணாடி இதயம் உவமை பொய்களை நிரப்பி,
பாரம் தாளாமல் உடையுமானால் பதமாய் சரிசெய்து,
வழி செல்ல எண்ணுகிறேன்!!!
நாடகமாய் வாழ்க்கை வழிநடத்தும் நாயகனாய் இறைவன்,
நான் என்னும் வார்த்தை வழிநடத்தி செல்லுமானால்,
நடக்கும் பாதை சரியோ?
நவீன் குமார் ரா