நம்பிக்கை

வினையின் பயனால்
விருப்பத்தின் மகிழ்வாழ்
விளையாடிப் பிறந்தோம்
பயத்தின் பலத்தை படித்தே வளர்ந்தோம்
பிடித்தே நடந்தோம்!

நிஜத்தில் நிறை காண
நிலையான வாழ்வில்லை
நிம்மதி தொடரவில்லை!

நம்பிக்கை என்பதுவே
நாளைய தேடல் சமரசம்
நடவாத விஷயங்களின் உள் மனம்!

மனம் பேசும் மகிழ்ச்சி
பணம் இருந்தால் நடக்கும்
நல்லதும் கெட்டதும்
நாம் தேடும் நல்லது!
நடந்த பின் கெட்டது!

எழுதியவர் : கானல் நீர் (1-Nov-15, 1:34 pm)
Tanglish : nambikkai
பார்வை : 178

மேலே